thaana serntha kottam

‘நானும் ரவுடி தான்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா ,கீர்த்தி சுரேஷ் நடிப்பில்; பொங்கலுக்கு திரைக்கு வெளிவரபோகும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இத்திரைப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் மற்றும் சூர்யாவின் 2D என்டர்டைமன்மேன்ட் நிறுவனம் இணைந்து தாயரிக்கின்றது. இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், செந்தில், கார்த்திக், ஆர்ஜே பாலாஜி,மீரா மிதுன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வெளியான இரண்டு பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது. சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த  படத்தின் டீசர் வெளியாகி சமூகவளைதலங்களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இதனை  தொடர்ந்து இந்த டீசரை வைத்தே பல விஷயங்களை அலசி வருகின்றனர் சூர்யாவின் ரசிகர்கள்.

பெட்ரோ மேக்ஸ் லைட்

இந்தப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் செந்தில் நடித்துள்ளார். சிறு வேடம் என்று இல்லாமல், படம் முழுக்க சூர்யா, கலையரசன், ரம்யாகிருஷ்ணன், சத்யன் உடன் வருவாராம்.

அதிகம் படித்தவை:  ஜெ., கார் டிரைவர் கனகராஜ் கொலையில், ஓ.பி.எஸ் மகனுக்கு தொடர்பு ? - போலீஸ் அதிர்ச்சி தகவல்!

செந்தில் கவுண்டமணி கூட்டணியில் வாழப் பழம் காமெடி அளவிற்கு நல்ல ரீச் ஆனது  பெட்ரோ மேக்ஸ் லைட்  மாண்டில் காமெடி.

Senthil – Petromax Light

இந்த பட டீசரில் இருக்கும் ஒரு காட்சியை சகிரீன் ஷாட் எடுத்து, செந்தில் அவர்கள் இப்படத்தில் அந்த பெட்ரோ மேக்ஸ் லைட் டை எரிய வைத்துவிட்டார் என்கின்றனர்.

விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா உறவு பற்றி அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான், இப்படத்தின் டீஸர் முடிவில் விக்னேஷ் சிவன் பெயர் இயக்குனர் என்று போடப்படுவதில் இருந்து விஷயம் கண்டு பிடித்துள்ளனர் நம் நெட்டிசன்கள்.

Vignesh shivN – Nayanthara

Vignesh sivaN பெயரில் முதல் மற்றும் கடைசி வார்த்தையை கேப்ஸ் செய்து போட்டுள்ளார் படக்குழு. இது மறைமுகமாக அல்ல மிக ஓபனாகவே விக்னேஷ் சிவன் – நயன்தாராவை குறிக்கிறது.

அதிகம் படித்தவை:  முன்னணி ஹீரோக்களுக்காக வெய்ட்டிங் லிஸ்டில் இருக்கும் இயக்குநர்கள்
சினிமாபேட்டை கிசு கிசு
Akshay Kumar in Special 26

படத்தின் டீஸர் பார்த்த பலரும், இந்தப்படம் கண்டிப்பாக, பாலிவுட் படமான  ‘ஸ்பெஷல் 26  தழுவல் என்று அடித்துக்கூறுகின்றனர். 2013 இல் வெளியான இப்படத்தில் அக்ஷய் குமார் தான் ஹீரோ. நீரஜ் பாண்டே தான் இயக்குனர். இந்தப்படம் மும்பையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக எடுக்கப்பட்டது தான். சிபிஐ அதிகாரிகள் போல் வேடமிட்டு பிரபல நகை கடையை கொள்ளை அடித்தது ஒரு ஹை டெக் கும்பல். எனவே இந்த சம்பவத்தை வைத்து, தன ஸ்டைலில் காமெடி கலந்து கண்டிப்பாக விக்னேஷ் சிவன் மாஸாக தான் எடுத்திருப்பார் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.