அரசு கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு.. தமிழக முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தற்போது தமிழக அரசின் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமுதாய மக்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் நிறைவேற்றியுள்ளார்.

இதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு (MBC – V) 10.5 சதவீதமும், சீர் மரபினருக்கு 7 சதவீதமும் தனி இட ஒதுக்கீடு வழங்கும் படியும்,

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 2.5 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கும்படி இந்த மசோதாவானது 110-ன்கீழ் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேபோல் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி மற்றும் ஏழை எளிய மக்களின் நகை கடன் தள்ளுபடி என வரிசையாக தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மக்களுக்கான பல நலத் திட்டங்களை அறிவித்துள்ளார்.

எனவே நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழக முதல்வர், தற்போது வன்னியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு செய்ததற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்