fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அவங்க இல்லைனா ஷகிலாவுக்கு பட வாய்ப்பே இல்லையாம்.. குஷ்புவுக்கு போட்டியா ஷகிலாவா.?

shakeela-kushbu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அவங்க இல்லைனா ஷகிலாவுக்கு பட வாய்ப்பே இல்லையாம்.. குஷ்புவுக்கு போட்டியா ஷகிலாவா.?

80களில் தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் கவர்ச்சி புயலாக வலம் வந்தவர் தான் நடிகை ஷகிலா. இவருடைய படங்கள் எல்லாம் முன்னணி நடிகர் நடிகைகளின் படங்களை முறியடிக்கும் அளவுக்கு வசூலை தட்டி செல்லும்.

மேலும் இவருடைய புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் வீதியில் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்து ஜொள்ளு விடுவது என்றே ஒரு ரசிகர் கூட்டம் காத்துக் கிடக்கும். இப்படிப்பட்ட பெரும் ரசிகர் கூட்டத்திற்கு சொந்தக்காரரான ஷகிலா, பிரஸ்மீட் ஒன்றில் பல சுவாரசியமான தகவல்களை பதிவிட்டுள்ளார்.

தற்போது ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ‘ஷகிலா’ என்ற பெயரில் ஹிந்தியில் பிரபல இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் என்பவரால் இயக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் ஷகிலாவாக ரிச்சா சத்தா நடித்துள்ளார்.

எனவே ஷகிலாவின் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வரும் டிசம்பர் 25 கிறிஸ்மஸ் தினம் அன்று திரையரங்கில் திரையிடப்படவுள்ளது. ஷகிலா படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

shakeela-movie-cinemapettai

நேற்று ஷகிலா படத்தின் பிரஸ்மீட் நடந்தது, அப்போது கலந்து கொண்டு பேசிய ஷகிலா தன்னுடைய இந்த வளர்ச்சிக்கு ‘நாலு வயதில் இருந்து 40 வயது வரை இருக்கும் ஆண்கள்தான் முழுக்க முழுக்க காரணம்’ என்று அவருடைய ஆண் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல் இனிவரும் நடிகைகளும், பெண்களும் என்னைப்போல் ஏமாந்து விடக் கூடாது என்றும், சம்பாரிக்கும் போது யாரையும் நம்பி பணம் கொடுத்து ஏமாந்துவிடாமல் தனக்கென சேர்த்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

actress-shakeela-cinemapettai

மேலும் குஷ்பு போல தனக்கு அரசியலுக்கு வர அதிக ஆர்வம் இருப்பதாகவும், மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் தான் இருப்பதால், அதை செய்ய விரும்பும் கட்சி என்னை அழைத்தால் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். எனவே ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை காண்பதற்காக அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top