அனைவரும் உழைப்பாளிகள் தான். அவர்கள் உழைக்கிற விதம் தான் இடத்திற்கு இடம் வேறுபடும். வாழ்க்கையில் வெற்றி தோல்வி சேர்ந்து வரும். நமக்கு ஏற்படும், தோல்விகள், துன்பங்கள் என்று அனைத்தையும் எவன் ஒருவன் முறியடிக்கிறானோ அவனே வாழ்க்கையில் வெற்றிபெறுகிறான். அந்த வரிசையில் சினிமா துறையைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களை கடந்து தற்போது நல்ல நிலைக்கு வந்துள்ளார்.

அவர் தான் நம்ம தல அஜித். தலைக்கணம் இல்லாதவர் என்று அனைவரும் கூறூகிறார்கள். இன்று தல தன்னுடைய 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் மட்டுமல்ல, தல அஜித்தின் பிறந்தநாளை தமிழ்நாடே கொண்டாடுகிறது என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். ஏனென்றால் தல அஜித்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

அதிகம் படித்தவை:  ஒரே வசனத்தை பேசிய தல தளபதி.!

இப்படிப்பட்ட தல அஜித் சிறிது காலம் மீடியா பக்கமே வரவில்லை ஏன் தெரியுமா?

எப்போதும் உள்ளதை உள்ளபடி பேசிவிடும் குணம் கொண்ட தல எதையும் பொருட்படுத்தாமல் பேசிய விதம் தான் அவரை மீடியா பக்கமே வரவிடாமல் செய்துவிட்டது. தன்னுடைய சினிமா பயணத்தின் போது கொடுத்த சில பேட்டி, அவரை தலைக்கணம் பிடித்தவர் என்றும், உயரத்திற்கு வருவற்கு பேராசைப்படுகிறார் என்றும் பேச்சுக்கள் கிளம்பியது.

அதிகம் படித்தவை:  விசுவாசம் படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்.! யார் தெரியுமா?

அதற்கு மறுப்புத் தெரிவித்தும் அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விஷயமாக அது மாறிப்போனது. அப்போது தான் தல சில விஷயங்களை உணர்ந்து, மீடியாவிலிருந்து ஒதுங்கி இருந்தார்.