இன்சூரன்ஸ் மட்டுமே இத்தனை கோடியா ?அமீர் கானின் PK பட சாதனையை முறியடித்த 2.0

2point0-enthiran-2இந்திய சினிமாவில் மிகப் பிரமாண்ட படமாக உருவாகிறது ரஜினியின் 2.ஓ. ஷங்கர் இயக்கும் இந்தப் படத்துக்கு ரூ 350 கோடி பட்ஜெட். அதற்கும் மேலே கூட ஆகும் என்கிறார்கள்.

இயக்குனர் ஷங்கர் மற்றும் ‘2-ஓ’ படக்குழுவினர் டெல்லி சென்று இருக்கிறார்கள். சுமார் ஒரு மாதம் இங்கு படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது

இந்த நிலையில் ரஜினியின் ‘2-ஓ’ படம் தமிழ் பட வரலாற்றில் முதன் முறையாக ரூ.330 கோடிக்கு இன்சூரன்சு செய்யப்படுகிறது. நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களில் இந்த படம் இன்சூரன்ஸ் செய்யப்படுகின்றது.

ஏற்கெனவே சில படங்கள் இப்படி இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்தாலும், இவ்வளவு பெரிய தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்ட படம் 2.ஓதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு அமீர் கானின் பிகே படம் ரூ. 300 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டது. அதன் சாதனையை 2.0 முறியடித்துள்ளதாம்.

Comments

comments

More Cinema News: