India | இந்தியா
இன்ஸ்டாகிராம் ஒரு நாள் வருமானத்தை கேட்டால் நெஞ்சு வெடிச்சுரும் போல.. அடேங்கப்பா!
மக்கள் அதிக நேரம் செலவிடும் சமூகவலைத்தளங்களில் மிக முக்கியமானது இன்ஸ்டாகிராம். 2012-ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை 715 மில்லியன் டாலருக்கு வாங்கியது.
இன்ஸ்டாகிராம் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அப்லோட் செய்து விளம்பரப்படுத்துவது மட்டுமல்லாமல் நண்பர்கள், உறவினர்களுடன் நீண்ட உறவு வளர்த்துக் கொள்வதற்கு மிகவும் பயன்படுகிறது.
இதன் மூலம் சினிமா மட்டும் கிரிக்கெட் பிரபலங்கள் பல கோடிகளை சம்பாதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருவாய் அவர்களுக்கு கொசுறு தான் என்றே கூறலாம்.
கடந்த ஆண்டு 2019 இன்ஸ்டாகிராமில் வருமானத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது பேஸ்புக் நிறுவனம். கடந்த ஆண்டு மட்டும் 20 பில்லியன் டாலர்களை இன்ஸ்டாகிராம் நிறுவனம் பெற்றுள்ளதாம். இதனால் ஒரு நாள் வருமானமே பார்த்தால் பல்லாயிரம் கோடியாம்.
இது ஃபேஸ்புக் நிறுவனத்தின் 3 மாத வருமானத்திற்கு நிகரானது என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் பேஸ்புக்கின் கடந்த ஆண்டு வருமானம் பார்க்கும் போது கிட்டத்தட்ட 80 பில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் சமூக வலைத்தளத்தை இணைத்து சேவையை வழங்குவதற்காக தற்போது முயற்சி செய்து வருகின்றனராம்.
தாங்கள் இன்ஸ்டாகிராமில் கணக்கில் இணைந்து உள்ளவர்கள், பின்தொடர்பவர்கள் யார் யார் என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த சேவை இன்ஸ்டாகிராமில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று இன்ச்டக்ரம் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.
