madonna-sebastianநேற்று தமிழில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான “காதலும் கடந்து போகும்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன்

படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் வரை ஒருவார்த்தை கூட தமிழில் சரியாக பேசத்தெரியாத மடோனாவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் தமிழ் பேச தடுமாறியபோது நலன் குமாரசாமி, விஜய்சேதுபதி இருவரும் தான் உதவிக்கரம் நீட்டினார்களாம்

அதிகம் படித்தவை:  சிம்புவின் தள்ளிபோகாதே பாடல் வெளியீட்டில் திடீர் மாற்றம்!

ஆனால், தமிழில் வாய்ப்பு கிடைத்ததுமே ஒப்புக்கொள்ள காரணம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தானாம். ஆம்.. தனக்கு நினைவு தெரிந்தநாளில் இருந்து எப்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையை கேட்க ஆரம்பித்தாரோ, அப்போதிருந்தே அவருக்கு தமிழ் மேல காதல் ஏற்பட்டுவிட்டதாம்.

அதிகம் படித்தவை:  24 படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி இதோ !

சொல்லப்போனால் தமிழின் மீதுள்ள காதல் தான் தன்னை தமிழ்ப்படத்தில் நடிக்க அழைக்க வந்தது என்கிறார். இன்னொரு காரணம் மடோனா நடிப்பை விட பாடுவதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறவர். ஒரு சிறந்த பின்னணி பாடகியாகவேண்டும் என்பதுதான் அவரது லட்சியமாக இருந்ததாம். இப்போதும் இருக்கிறதாம்.