Tamil Cinema News | சினிமா செய்திகள்
விவேகம் படத்தின் எடிட்டருக்கு வந்த சோதனை!
அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் தற்போதைய நிலை என்ன என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
தற்போது ஷுட்டிங் இறுதி கட்ட நிலையில் நடைபெற்று கொண்டிருகிறது. அஜித்க்கு பிறந்தநாள் ஒரு பக்கம் வருகிறது. ரசிகர்கள் கொண்டாடுவதற்காக வழக்கம் போல அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார்கள்.
அஜித் பிறந்தநாளில் விவேகம் படத்திலிருந்து எதாவது ஸ்பெஷல் வரும் என எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் எடிட்டர் Livingston Antony Ruben செர்பியா செல்வதற்காக கிளம்பினார். ஆனால் பாம் எச்சரிக்கை வந்ததால் விமானம் 7 மணி நேரம் நிறுத்தப்பட்டு 7 மணி நேரம் தாமதமாக சென்றது.
பொதுவாகவே விமான நிலையங்களில் சோதனை மிகப்பெரிய அளவில் இருக்கும். பாம் மிரட்டல் என்றால் சொல்லவா வேண்டும்.
இதனால் சங்கடமான அவர் நல்லா வச்சு செஞ்சாங்க என சொல்லியிருக்கிறார்.
