நாகேஷுக்கு இழைக்கப்பட்ட அநீதி.. கடைசி காலத்தில் கமல் படத்தால் கிடைத்த கௌரவம்

கவுண்டமணி காலத்தில் தொடங்கி இப்போது உள்ள யோகி பாபு வரை எல்லோருக்கும் முன்னோடியாக இருந்த காமெடி நடிகர் நாகேஷ் தான். இவர் சாதாரணமாக வாய்மொழி மட்டுமல்லாமல் அவரது உடல் மொழியிலும் நகைச்சுவையை கொண்டு வருவார். சிவாஜி, எம்ஜிஆர் ஆகியோருடன் பல படங்களில் நாகேஷ் இணைந்து நடித்துள்ளார்.

இவரை காமெடியனாக மட்டுமே பார்த்த ரசிகர்களை சில கதாபாத்திரங்களில் ரசிகர்களுக்கு கண்ணீர் வரவும் செய்துள்ளார். இதில் எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நாகேஷ் முத்துரை பதித்துள்ளார். அதுவும் திருவிளையாடல் படத்தில் தருமியை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.

Also Read : எல்லோரைப் போல் நாகேஷ்க்கும் வந்த ஆசை.. அதிர்ஷ்டத்தை பயன்படுத்தாமல் விட்ட சோகம்

மேலும் அப்போதைய காலகட்டத்தில் சிவாஜி, எம்ஜிஆர் கால்ஷீட் கூட வாங்கி விடலாமாம். ஆனால் நாகேஷின் கால்ஷீட் வாங்குவது குதிரைக்கொம்பாக இருக்குமாம். எம்ஜிஆர் இடம் வரும் தயாரிப்பாளர்களிடம் நாகேஷிடம் கால்ஷீட் வாங்கியாச்சா என்று தான் முதல் கேள்வி கேட்பாராம், தயாரிப்பாளர்களும் வாங்கியாச்சு என்று சொல்வார்களாம்.

அப்போ படம் 90 சதவீதம் ஹிட் என்று புரட்சித் தலைவர் சொல்வாராம். அவ்வாறு எம் ஜி ஆர், சிவாஜி ஆகியோருக்கு இணையாக திறம்பட நடித்தும் அந்த காலத்தில் நாகேஷுக்கு தேசிய விருது கொடுத்ததே கிடையாது. அப்படி ஒரு திறமையான நடிகர் அந்த காலத்தில் அங்கீகரிக்கப்படவில்லை.

Also Read : அந்த நடிகையை பார்த்தாலே வெறுப்பா இருக்கு.. பாலச்சந்தர் படத்தில் நடிக்க மறுத்த நாகேஷ்

அதன் பின்பு 1994 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நடித்ததற்காக நாகேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. அதாவது சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை நாகேஷ் பெற்றார். அதுமட்டுமின்றி நம்மவர் படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது.

இவ்வளவு நாள் தமிழ் சினிமாவில் நாகேஷ் செய்த அர்ப்பணிப்புக்கு நம்மவர் படத்தில் தான் அதற்கான கௌரவம் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் ரசிகர்கள் எல்லோரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தி இருப்பார் நாகேஷ்.

Also Read : எம்ஜிஆரின் கோபத்தைத் தூண்டிய நாகேஷ் .. தோட்டத்திற்கு வர சொல்லி என்ன செய்தார் தெரியுமா.?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்