Tamil Cinema News | சினிமா செய்திகள்
இனியாவின் புது முயற்சி! மற்ற நடிகைகளும் தொடர்வார்களா?
தமிழ் சினிமாவில் இளம் நாயகியாக இருக்கும் இனியா, தனது தயாரிப்பில் வெளியாகி இருக்கும் மியா பாடல் மூலம் கிடைக்கு நிதியை கேன்சர் நோயாளிகளுக்கு உதவ இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் இனியா. ஆனால், இவருக்கு சரியான பெயரை பெற்று தந்தது வாகை சூடவா படம் தான். ஏ.சற்குணம் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் இனியா கிராமத்து பெண்ணாக நடிப்பில் அசத்தி இருப்பார். இப்படத்திற்காக இனியாவிற்கு பல விருதுகள் கிடைத்தது. ஆனால், தொடர்ந்து, அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தொடர்ந்து, தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாத இனியா தற்போது மலையாளத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், இசை ஆல்பம் ஒன்றை இனியா வெளியிட இருக்கிறார். அவரே நடித்து இருக்கும் இந்த ஆல்பத்துக்கு மியா எனப் பெயரிட்டுள்ளனர். இந்த இசை ஆல்பத்தை மகேஷ் இயக்கி இருக்கிறார். இதற்கு அபிரெஜி, லாவெல், ஜெயன் ஆகியோர் இசை அமைத்துள்ளனர். பாடலுக்கு அருண் நந்தகுமார் நடனம் அமைத்துள்ளார்.
இந்த ஆல்பம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் இனியா, பிரபல டான்ஸராகி கொடி கட்டி பறக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு பெண்ணை பற்றிய பாடல் தான் மியா. அதிகமான விருதுகளை வாங்க வேண்டும் என்பதே அந்தப் பெண்ணின் வாழ்க்கை லட்சியம். அதற்காக போராடுகிறாள். வரும் தடைகளை உடைத்து அவள் லட்சியத்தில் வென்றாளா? இல்லையா? என்பதே இந்த ஆல்பம். விரைவில் வெளிவர இருக்கும் இந்த ஆல்பத்தின் மூலம் கிடைக்கும் நிதியை கேன்சரால் பாதிக்கப்பட்டு இருக்கும் 10 பேரின் மருத்துவ செலவுக்கு உதவ இருக்கிறேன். இன்னும் நிறைய திட்டமிட்டு உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
