Connect with us
Cinemapettai

Cinemapettai

iniya-gopi-bhgakiyalaxmi-serial

India | இந்தியா

கோபியை வெறுத்து ஒதுக்கிய இனியா.. அம்மா பாசத்திற்காக ஏங்கும் தருணம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது சுவாரசியமான கதைக்களத்துடன் வருகிறது. ராதிகாவை சந்திக்க செல்லும் பாக்கியா என்ன கேள்விகள் கேட்கப் போகிறார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது கோபியை விட்டுப் பிரிய முடிவு எடுத்திருக்கும் ராதிகா பாக்யாவின் கேள்விகளால் ஒருவேளை வில்லியாக மாறவும் வாய்ப்புள்ளது. மறுபக்கம் தனது சொந்தக் குடும்பமும் கோபியை வெறுத்து ஒதுக்குகிறது. என்னதான் இருந்தாலும் கோபி தனது மகள் இனியா மீது அதீத அன்பு வைத்துள்ளார்.

அதேபோல் இனியாவிற்கும் தனது அம்மாவை விட அப்பா கோபியை தான் ரொம்ப பிடிக்கும். இந்நிலையில் பாக்கியா வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இனியா தனது ஆதங்கத்தை கோபியிடம் வெளிகாட்டுகிறார். அதாவது அம்மாவை உங்களுக்கு பிடிக்காது என்று தெரியும்.

ஆனா அம்மாவை ரொம்ப கஷ்டப்படுத்திடிங்க. உங்க முகத்துல முழிக்கவே எனக்கு பிடிக்கல. என்கிட்ட பேசாதீங்க என இனியா கோபியை வெறுத்து ஒதுக்கியுள்ளார். இதனால் கோபி தனது மகளே வெறுக்கும் அளவிற்கு நடந்து கொண்டுள்ளோம் என நினைத்து வருந்துகிறார்.

மேலும் இனியா ஜெனியிடம் தனது அம்மாவைப் பற்றிச் சொல்லுகிறார். அதாவது நான் எவ்வளவு திட்டினாலும் உடனே அம்மா வந்து என்னிடம் பேசுவாங்க. ஆனா அவங்க இப்படி வீட்டை விட்டுப் போனது எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு. அம்மா எப்ப வீட்டுக்கு வருவாங்க என் ஜெனியிடம் இனியா கேட்கிறார்.

சீக்கிரமே வந்துடுவாங்க என ஜெனி இனியாவை சமாதானப்படுத்துகிறார். தந்தைக்காக தாயை வெறுத்து வந்த இனியா தற்போது தனது அம்மாவின் உண்மையான பாசத்தை புரிந்து கொண்டார். தனது குடும்பத்திற்காக மட்டுமே வாழக்கூடியவர் அம்மா என்று உணரும் தருணம் இது. மேலும் பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இந்த வார பாக்கியலட்சுமி தொடர் வர இருக்கிறது.

Continue Reading
To Top