fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வெளுத்து வாங்கப்போகும் மழை.. 20ஆம் தேதிக்கு மேல் தமிழகத்தின் நிலை என்ன?

rain-chennai

Tamil Nadu | தமிழ் நாடு

வெளுத்து வாங்கப்போகும் மழை.. 20ஆம் தேதிக்கு மேல் தமிழகத்தின் நிலை என்ன?

தற்போது தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 20ஆம் தேதிக்கு மேல் வடகிழக்குப் பருவமழை உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் திண்டுக்கல் மதுரை கோவை நீலகிரி திருநெல்வேலி தூத்துக்குடி ராமநாதபுரம் விருதுநகர் திருச்சி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

இதில் சேலம் திண்டுக்கல் நெல்லை கோவை நீலகிரி ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்திற்குள் அதிகபட்சமாக கொடைக்கானலில் சுமார் 8 சென்டி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 சென்டிமீட்டர் மழையும், சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 3.9 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஆங்காங்கே மழை பெய்யும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top