Tamil Cinema News | சினிமா செய்திகள்
இரண்டாம் பாகத்தை அறிவித்த தயாரிப்பாளர். நான் இருக்கேனா சார் என்று கேட்ட விஷ்ணு விஷால்.

இன்று நேற்று நாளை
2015-ஆம் ஆண்டு ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன், ஆர்யா (கௌரவ வேடம்) நடித்த படம். திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமாரும், ஸ்டூடியோ கிரீன்கே.இ.ஞானவேல் ராஜாவும் இணைந்து படத்தை தயாரித்திருந்தனர்.
சயன்ஸ் பிக்ஷன் ஜானரில் வெளியாகி ஹிட் அடித்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் விஜயதசமி தினமான நேற்று ட்விட்டரில் அறிவித்தார்.
சில நிமிடங்களிலேயே இரண்டாவது இன்னிங்சில் நானும், கருணாகரனும் இருக்கிறோமா ? என்று நடிகர் விஷ்ணு விஷால்
ட்வீட் தட்டினார்.
அதற்க்கு பதில் “நீங்கள் இருவரும் இல்லாமல் எப்படி?” என்று கூறியிருக்கிறார் சி.வி.குமார்.
விரைவில் மற்ற தகவல்களின் அறிவிப்பு வெளிவரும் எனவும் கூறியுள்ளார் தயாரிப்பாளர். இம்முறை விஷ்ணு மட்டும் ஹீரோவா அல்லது ஆர்யாவும் இணைந்து டபிள் ஹீரோ சப்ஜெக்ட்டா , இயக்குனர் யார் என்று நம் நெட்டிசன்கள் இப்பவே கிசு கிசுக்க ஆரம்பித்துவிட்டனர்.
