indonesia-girl-marriage-in-tamilnadu
indonesia-girl-marriage-in-tamilnadu

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தமிழக இளைஞருக்கு இந்து பாரம்பரிய முறைப்படி இந்தோனேசியா பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. காரைக்குடி அருகே பள்ளத்தூர் எனும் ஊரைச் சேர்ந்த கார்த்திகேயன் சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருடன் பணிபுரிந்து வருபவர் பெர்லிஸ் எனும் இந்தோனேசிய பெண் இவர்கள் இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பெர்லிஸ்க்கும், கார்த்திகேயனுக்கும் இன்று இரு வீட்டார் சம்மதத்துடன் பள்ளத்தூரில் தமிழக இந்து பாரம்பரிய முறைப்படி திருமாங்கல்யம் கட்டி அம்மி மிதித்து பெரியோரிடம் ஆசி பெற்றனர். தமிழக கலாச்சாரபடியும் இந்து முறைப்படியும்  திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்ததாக இந்தோனேசியா பெண்ணும் மணப்பெண்ணும் ஆன பெர்லிஸ் தனது ஆசையின்படி திருமணம் நடைபெற்றதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.

அதிகம் படித்தவை:  விஸ்வாசம் படத்தை பற்றி கேட்டதற்கு.! ஒரே வார்த்தையில் கூறி அதிர வைத்த யோகி பாபு.!