இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 5 நடிகர்கள்.. தளபதி, சூப்பர் ஸ்டாருக்கு கிடைத்த இடங்கள்

பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லோரும் இப்பொழுது பான் இந்தியா படங்களை குறிவைக்கின்றனர். அது மட்டுமின்றி படத்தின் பட்ஜெட் குறைந்தது 300 முதல் 400 கோடிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். அப்பொழுது தான் அவர்கள் ஒரு பெருந்தொகையை சம்பளமாக பெற முடியும். அப்படி சம்பளம் வாங்குவதில் முதல் ஐந்தில் இருக்கும் பெரிய நடிகர்கள்.

கிருத்திக் ரோஷன்: இவர் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். 50 கோடிகள் வாங்கி வந்த இவர் சமீபத்தில் ஒரு படத்திற்கு 85 கோடிகள் வரை தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி விட்டார். விக்ரம் வேதா படத்தில் நடிப்பதற்காக இவர் வாங்கிய சம்பளம் 60 கோடிகள்.

பிரபாஸ்: படங்களே ஓடாவிட்டாலும் சம்பளத்தை மற்றும் குறைத்துக் கொள்வதாக இல்லை பிரபாஸ். பெரும்பாலும் பான் இந்தியா படங்களில் தான் நடிக்கிறார் . ஒரு படத்திற்கு இவர் வாங்கும் சம்பளம் 120கோடிகள். ஆதிபுருஸ் படத்திற்காக இவர் இந்த சம்பளத்தை வாங்கி உள்ளார்.

ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ஒருத்தர் தான் என நிரூபித்த ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 210 கோடிகள். ஜெயிலர் படத்திற்கு இவர் இந்த சம்பளத்தை வாங்கியுள்ளார். தற்போது நடித்துவரும் வேட்டையன் மற்றும் கூலி படங்களுக்கும் இதே சம்பளம் தான்.

ஷாருக்கான்: 250 கோடிகள் சம்பளமாக வாங்குகிறார் ஷாருக்கான். பாலிவுட்டின் கிங் காங் இவர்தான் சமீபத்தில் தான் 220 கோடிகளில் இருந்து 30 கோடிகள் ஏற்றியுள்ளார். சல்மான் கான், அமீர்கான் போன்றவர்களுக்கு 200 கோடிகள் சம்பளம்.

விஜய்: விஜய் சினிமாவிற்கு முழுக்கு போடப் போகிறார்.அடுத்த நடிக்கவிருக்கும் தளபதி 69 தான் தன்னுடைய கடைசி படம் என்று அறிவித்து விட்டார். 220 கோடிகள் சம்பளம் வாங்கி வந்த இவர் கடைசி படத்திற்கு 270 கோடிகள் வரை டிமாண்ட் வைத்துள்ளார்.

- Advertisement -spot_img

Trending News