ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் திடீரென நீக்கப்பட்டார்.இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

முதல் ஒருநாள் போட்டி, வரும் 17ல் சென்னையில் துவங்கவுள்ளது. இதற்காக ஆஸ்திரேலிய அணி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.இத்தொடருக்காக முதல் மூன்று போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதில் ஷிகர் தவான் இடம் பெற்றிருந்தார். ஆனால், இவர் தற்போது திடீரென இந்திய அணியில் இருந்து தவான் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதில் மாற்று வீரர் யாரும் அறிவிக்கப்படவில்லை.

இவரது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், தன்னை அணியில் இருந்துவிடுவிக்கும்படி தவான் கேட்டுக்கொண்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.