Sports | விளையாட்டு
உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இந்திய அணியின் பிங்க் பால் டெஸ்ட்.. தொடங்கியது முதல் அத்தியாயம்
இந்திய அணி எப்போது பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் இன்று முதல் முறையாக வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறது.
முன்னதாக ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி பகலிரவு ஆட்டத்தில் பங்கு பெறும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அது நடைபெறவில்லை. தற்போது வங்கப்புலி கங்குலி பிசிசிஐ தலைவராக பதவியேற்ற பின்பு முதல் முறையாக கொல்கத்தாவில் இன்று பகல் இரவு டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் இந்திய அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி 3 டி20 கள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இந்தூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட் செய்ய ஆரம்பித்தது.
முன்னதாக டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
