Connect with us
Cinemapettai

Cinemapettai

kamal-indian2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஊத்தி மூடப்பட்டதா இந்தியன் 2? லைக்கா விவகாரத்தில் கமல் எடுத்த முடிவு.. வருத்தத்தில் ஷங்கர்

இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வந்த திரைப்படம்தான் இந்தியன் 2. பல வருடங்களுக்கு பிறகு கமல் மற்றும் ஷங்கர் கூட்டணியில் ஒரு படம் உருவானதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த் போன்றோரும் நடித்து வந்தனர். அனிருத் இசையமைத்த இந்த படத்தை லைக்கா நிறுவனமே பெரிய பொருட்செலவில் தயாரித்து வந்தது. இந்தியன் 2 படப்பிடிப்புகள் பாதி முடிவடைந்த நிலையில் பல்வேறு பிரச்சனைகள் வந்து சென்றது.

மேற்கொண்டு இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து ஆகியவை லைக்கா நிறுவனத்திற்கு பெரிய சிக்கலை கொடுத்து விட்டதாம். இதனால் படத்தின் பட்ஜெட்டை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் ஷங்கர். ஆனால் பட்ஜெட்டை குறைத்தால் படம் நினைத்த அளவுக்கு சிறப்பாக வராது என தெளிவாக எடுத்து கூறி விட்டாராம்.

கமல் தரப்பில் இருந்தும் சங்கருக்குதான் சப்போர்ட் அதிகமாக இருக்கிறதாம். அதற்குக் காரணம் படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்துக்கு பிறகு கமல்ஹாசனுக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் தன்னுடைய சொந்த தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் உடன் அடுத்த படம் என பிஸியாகி விட்டார்.

ஆனால் சமீபத்தில் லைகா நிறுவனம் சங்கரை சந்தித்து மீண்டும் படப்பிடிப்புக்கு போகலாம் என்று கூறியுள்ளதாம். மேலும் கமலஹாசன் ஒரு மாதம் மட்டுமே கால்சீட் தர முடியும் எனவும், அதற்குள் தன்னுடைய காட்சிகள் அனைத்தையும் எடுத்து விட வேண்டும் என உத்தரவிட்டுள்ளாராம். இதனால் தற்போது மீண்டும் படப்பிடிப்பு வேகம் எடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

ஆனால் இதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. இடையில் சங்கர் இரண்டு ஹீரோக்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி பாதியில் தடைபட்ட படம் என்றால் அது மருதநாயகம் தான். அந்த படத்தின் கதை ஆகிவிடுமோ என இந்தியன் 2 ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.

indian2-cinemapettai

indian2-cinemapettai

Continue Reading
To Top