Connect with us
Cinemapettai

Cinemapettai

indian-kamal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்தவர்களுக்கு பணம் கொடுக்காமல் அலைக்கழிக்கும் சங்கர்.. நாமம் போட்ட லைக்கா!

சில மாதங்களுக்கு முன் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் திடீரென விபத்து ஏற்பட்டு மூவர் உயிரிழந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் நடித்து கொண்டிருந்த அந்த காட்சியில் கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தால் இருவருக்கும் அன்று பெரும் விபத்து ஏற்பட இருந்தது. ஆனால் எப்படியோ தப்பித்து விட்டார்கள்.

மேலும் அந்த விஷயம் விஸ்வரூபம் எடுக்க லைக்கா நிறுவனம், இயக்குனர் ஷங்கரும், கமலஹாசன் ஆகியோரும் இறந்து போன மூன்று பேருக்கும் கோடிக்கணக்கில் பணம் தருவதாக அறிவித்து இருந்தனர்.

அப்போதே கொடுக்கச் சென்றவர்களிடம் தொழிலாளர் சங்கம் மூக்கை நுழைத்து கட்டையை போட்டுள்ளது. தற்போது அந்த மூவரின் குடும்பமும் சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைமையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் உதவி செய்பவர்களை கேட்டுள்ளனர்.

ஆனால் அது சம்பந்தமாக ஷங்கரும் லைக்கா நிறுவனமும் கண்டுகொள்ளவே இல்லையாம். கமல்ஹாசனுக்கும் இந்த விஷயம் தெரியுமா என்பது சந்தேகம் தான். அறிவிப்பது ஒன்று அப்புறம் நடந்துகொள்வது ஒன்று என அரசியல்வாதிகளாகவே மாறிவிட்டார்கள் இந்தியன் 2 படக்குழுவினர்.

தங்களுடைய பெயரை விளம்பரப்படுத்துவதற்காக இப்படி உதவி செய்கிறேன் என அறிவித்துவிட்டு பின்னர் அவர்களை அலைக்கழித்து ஏமாற்றுவது சரி இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். இந்த செய்தியை வலைப்பேச்சு நண்பர்கள் தெரிவித்தனர்.

Continue Reading
To Top