fbpx
Connect with us

Cinemapettai

அமெரிக்க தேர்தலில் இந்திய பெண்.. டிரம்ப்க்கு ஆப்பு அடிப்பாரா

Trump

World | உலகம்

அமெரிக்க தேர்தலில் இந்திய பெண்.. டிரம்ப்க்கு ஆப்பு அடிப்பாரா

அமெரிக்க தேர்தல் களத்தில் குதிக்கும் இந்தியப் பெண்..!

உலக நாடுகளில் தலைசிறந்த நாடாக விளங்கும் அமெரிக்கா அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலை நடத்த உள்ளது. தற்போதைய அதிபரான டிரம்ப் ஆட்சியில் நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.

H1B விசாவுக்கு கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டன, மெக்சிகோ நாட்டின் எல்லையில் சுவர் அமைக்கப்பட்டு மக்களின் மன நிலைக்கு எதிரான சில காரியங்களை செய்ததால் அவர் போக்கை துணிச்சலாக எதி ர்கொண்டவர் தான் கமலா ஹாரிஸ்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் கலிபோர்னியா மாகாண செனட் சபை உறுப்பினராக இருந்து, வழக்கறிஞராக இருந்து, இப்பொழுது அரசியல்வாதியாக களமிறங்க உள்ளார். இவருக்கு இளைஞர்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மையர் இடம் கணிசமான செல்வாக்கு இருக்கிறது.

இவரது கொள்கையாக அமெரிக்காவை காப்பது என் கடமை என்று தெரிவித்துள்ளார். ஆகையால் அடுத்த அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருப்பதால் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமலா ஹாரிஸ்க்கு போட்டியாக இன்னும் பல போட்டியாளர்கள் உள்ளனர் மற்றும் இவர்களைத் தாண்டி தேர்தல் களத்தில் அவர் பயன்படுத்தப்போகும் பிரச்சார வியூகமே வெற்றியை நிர்ணயிக்கப் போகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top