Connect with us
Cinemapettai

Cinemapettai

டெஸ்ட் அணியில் அதிரடி மாற்றம்: கேஎல் ராகுலை தூக்கி அடித்த ரோகித் சர்மா

rohit-sharma-kl-rahul

Sports | விளையாட்டு

டெஸ்ட் அணியில் அதிரடி மாற்றம்: கேஎல் ராகுலை தூக்கி அடித்த ரோகித் சர்மா

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 தொடர்கள் வருகிற 15-ந் தேதி முதல் தொடங்க உள்ளன. அதற்காக தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்துள்ளது.

முதலில் டி20 போட்டிகள் மற்றும் அதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் என அட்டவணை போடப்பட்டுள்ளது. டி20 தொடருக்கான இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர். தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவின் டெஸ்ட் அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்று இன்று அறிவித்தது.

அதற்காகப் இந்திய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதற்கு முன் யார் யார் டெஸ்ட் அணியில் விளையாட யாருக்கு வாய்ப்பு வந்தது என பார்ப்போம்.

டெஸ்ட் போட்டிகளை பொருத்தமட்டில் தொடக்கம் ரொம்பவே முக்கியம். ஆனால் சமீப காலமாக இந்தியா மட்டுமில்லாது அனைத்து அணிகளும் தொடக்கத்திற்கு தடுமாறி வருகின்றன. இந்திய அணியை பொருத்தமட்டில் கேஎல் ராகுல் மிகவும் சொதப்பி வருகிறார். இவர் ஃபார்மில் இல்லாதபோதும் விராட் கோலி தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தார். ஆனால் அதைக் காப்பாற்றிக் கொள்ள கேஎல் ராகுல் மறந்து விட்டார் என்றே கூறலாம். இவர் பார்மில் இல்லாததை அறிந்து இந்திய அணிக்கு ரோஹித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரின் போது மீண்டும் அணியில் இடம் பிடித்தார். ஆனால் கேஎல் ராகுலுக்கே தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சொதப்பினார்.

ஆகையால் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா ஓபனிங் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையே தேர்வு குழு தலைவரான எம்எஸ்கே பிரசாத் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் ராகுலுக்கும் மாற்று வீரராக இந்திய ஏ அணியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் பிரியாக் பன்சால் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை.

ஆகையால் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் ஆடுவார்கள். மேலும் நடுவரிசையில் ரகானே மற்றும் அதிகாரி ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். விக்கெட் கீப்பிங் பொறுத்தவரையில் ரிசார்ட் மற்றும் ரிதிமான் சஹா ஆகியோர் உள்ளனர்.

indian-cricket-player

indian-cricket-player

அதேபோல் பந்துவீச்சு கூட்டணியில் பும்ரா, இஷாந்த் சர்மா மற்றும் முகமது சமி கூட்டணி சிறந்து விளங்குகின்றனர். இன்னொரு இளம் வேகப்பந்து வீச்சாளரான நவதீப் சைனி இல்லை.

இந்திய அணி வீரர்கள்:

ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அஷ்வின், ஜடேஜா, பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, குல்தீப் யாதவ், ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), சுக்மந்த் கில்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top