fbpx
Connect with us

அஸ்வின், ரோஹித் வெளியே! நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா ?

Sports | விளையாட்டு

அஸ்வின், ரோஹித் வெளியே! நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா ?

IND VS AUS

இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உள்ளது. முதலில் டி 20 , கடைசியாக ஒரு நாள் போட்டிகள். இடையில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளின் மீதே எதிர்பார்ப்பு அதிகம். இதற்கும் முன் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் பொழுதும் கோப்பையை இந்தியா வெல்லும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

இம்முறையும் இல்லாமல் இம்முறை 18 வீரர்கள் கொண்ட டீம்மை தேர்வு செய்தது பிசிசிஐ. முதல் டெஸ்ட் அடிலெய்டு நகரில் நடந்தது. புஜாராவின் அசத்தல் சதத்தால், முதல் நாளில் மோசமான நிலையில் இருந்த இந்தியா அணி வெற்றியை கண்டது. இரண்டாவது இன்னிங்க்சில் இந்தியா பாட்ஸ்மான்கள் ராகுல், கோலி மற்றும் ரஹானேவும் சிறப்பாக ஆட, பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியை செவ்வனே செய்து இந்தியாவை வெற்றி பெற செய்தனர்.

View this post on Instagram

#cheteshwarpujara #Puji

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

நாளை பெர்த்தில் இரண்டாவது போட்டி நடக்கிறது. இது புது மைதானமாகும். நாளை நடப்பது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி. முதல் போட்டியில் பில்ட்டிங் சமயத்தில் ரோஹித்துக்கு காயம் ஏற்பட்டது. அதே போல் அஸ்வினுக்கும் அடிவயிறு மற்றும் தசை பிடிப்பு காரணமாக ஆட மாட்டார். ஏற்கனவே இளம் வீரர் ப்ரித்வியும் காயம் அடைந்துள்ளார். இந்நிலையில் போட்டிக்கு முன் 13 வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

இதில் ஹனுமத் விஹாரி, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நால்வரில் இருவர் நாளை ஆடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

perth

பிட்சில் புற்கள் அதிகமாக உள்ளது, எனவே இந்தியா அணி நான்கு பந்துவீச்சாளர் என்ற நோக்கில் தான் களம் இறங்கும் என்கின்றனர் வல்லுநர்கள். புற்கள் நீக்கப்படாத பட்சத்தில் நான்கு முன்னணி பந்துவீச்சாளர்களுடன் இந்தியா ஆட வாய்ப்பு அதிகம். உமேஷ் யாதவை ஓரம் கட்டிவிட்டு, அஸ்வின் இடத்தில் பேட்டிங் திறன் இருப்பதால் புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ரோஹித் இடத்தில் விஹாரி சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. விஹாரி ஆப் ஸஃபின்னும் வீசுவது கூடுதல் ஸ்பெஷல். சென்ற போட்டியில் முரளி விஜய் மட்டுமே சில ஓவர்கள் வீசினார். இம்முறை விஹாரி குறைந்தது 10 ஓவராவது வீசுவார் அணியில் சேர்க்கும் பட்சத்தில்.

உத்தேச 11

1 M Vijay, 2 KL Rahul, 3 Cheteshwar Pujara, 4 Virat Kohli (capt) 5 Ajinkya Rahane, 6 Hanuma Vihari, 7 Rishabh Pant (wk), 8 Bhuvneshwar Kumar, 9 Ishant Sharma, 10 Mohammed Shami, 11 Jasprit Bumrah

இது நமது கருத்து தான். போட்டியின் இரவு இன்று நிறைய புற்கள் நீக்கப்படும் பட்சத்தில் ஆல் ரௌண்டார் ஜடேஜா அஸ்வின் இடத்தில் சேர்க்கவும் வாய்ப்புள்ளது. மேலும் சமிக்கு பதிலாக உமேஷையும் கோலி களம் இறங்கினாலும் ஆச்சிர்யப்பட வாய்ப்பில்லை.

1 Aaron Finch, 2 Marcus Harris, 3 Usman Khawaja, 4 Shaun Marsh, 5 Peter Handscomb, 6 Travis Head, 7 Tim Paine (capt & wk), 8 Mitchell Starc, 9 Pat Cummins, 10 Nathan Lyon, 11 Josh Hazlewoo

ஆஸ்திரேலிய சென்ற போட்டியில் ஆடிய அதே வீரர்களுடன் களம் இறங்குகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Sports | விளையாட்டு

Advertisement

Trending

To Top