இந்திய அணிக்கு இனி இவர்தான் கேப்டன்.. பிசிசிஐ அதிரடி.. அப்பனா கோலி நிலைமை?

உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த பின் இந்திய அணி வீரர்கள் மீது நடவடிக்கை எடுத்து வேறு புதிய அணியை நியமிக்க ஆலோசனை நடக்கிறது. மேலும் முக்கியமாக இந்திய அணியில் கேப்டன் மாற்றப்படலாம் என்று பேச்சு நிலவுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்கள் ஓரங்கட்டப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துவிட்டது பிசிசிஐ. முதற்கட்டமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இந்திய அணிக்கு தோனி, கோலி போன்ற மூத்த வீரர்கள் இல்லை பல புதிய வீரர்கள் களம் இறங்குவார்கள் என்று கூறுகின்றனர்.

அதேநேரத்தில் ஒரு நாள் போட்டியில் கேப்டன் பதவிக்கு கோலியை தூக்கிவிட்டு ரோகித் சர்மாவை நியமிக்கலாம் என்று ஆலோசிக்கப்படுகிறது.கோலி டெஸ்ட் போட்டிக்கு மட்டும் கேப்டனாக செயல்படட்டும், ஒருநாள் போட்டிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் என ஆலோசிக்கின்றனர்.

இந்நிலையில் கண்டிப்பாக தோனிக்கு அணியில் இடம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. அவருக்கு 38 வயது ஆனதால் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment