கடந்த நான்கு வருடங்களாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. இரண்டு முறை இந்தியா பைனல் விளையாடியும் தோல்வி அடைந்துள்ளது. இம்முறை மூன்றாவதாக பைனலுக்கு செல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு இருந்து வருகிறது.
2019 மற்றும் 2021 ஆண்டுகளுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை நியூசிலாந்து அணி வென்றது. இந்தியாவுடன் மோதிய அந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தன்வசமாகியது. இங்கிலாந்தில் முதல் முதலாக இந்த போட்டிகள் நடைபெற்றது.
2021மற்றும் 2023 ஆண்டுகளுக்கான சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதிலும் இந்தியா ரன்னராக இரண்டாவது இடத்தை பிடித்தது. இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா மீண்டும் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்புக்கு வந்த ஆபத்து
இப்பொழுதும் மூன்றாவது முறையாக இந்திய அணி பைனலுக்கு நுழையும் வாய்ப்புக்கு இலங்கை அணி செக் வைத்துள்ளது. அவர்கள் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வென்றதால் அவர்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இப்பொழுது இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளது. அதில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதி போட்டிக்கு முன்னேறும். பங்களாதேஷ்க்கு எதிராக இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 5 போட்டிகள் வென்றால் தான் இந்திய அணி பைனலுக்கு முன்னேற முடியும். இலங்கை அணியும், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் நடக்கவிருக்கும் போட்டிகளில் தோல்வி அடைய வேண்டும்.
- ஆதரவில்லாமல் டம்மியாகும் ஹர்திக் பாண்டியா
- இந்திய அணி ஆடப்போகும் சவால் நிறைந்த போட்டிகள்
- இலங்கை அணி மீது மொத்தமா இடியை இறக்கிய அரசாங்கம்