காரணமில்லாமல் புறக்கணிக்கப்படும் 3 இந்திய வீரர்கள். ஒருவேளை அப்படி முத்திரை குத்தி விட்டார்களா?

இந்திய அணி உலகக்கோப்பை முடிந்தபின்னர் நியூசிலாந்து தொடருக்காக தயாராகிக்கொண்டிருக்கிறது. 20 ஓவர், 50 ஓவர், டெஸ்ட் போட்டிகள் என ஒரு நீண்ட தொடர் நடக்கவிருக்கிறது. இந்த தொடரில் ஒவ்வொரு பார்மட் போட்டிகளுக்கும், தனித்தனி அணியாக இருக்குமென பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடர் மட்டுமல்லாது நடந்து முடிந்த உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் காரணமே இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட மூன்று வீரர்களின் லிஸ்ட் இதோ,

சுப்மன் கில்: கடந்த சீசனில் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் சுப்மன் கில் பெயர் இல்லாமல் இருக்காது. டெஸ்ட் போட்டிகளிலும் ஓரளவு அதிரடியாக ஆடக்கூடிய கில்லை, நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் தேர்வு செய்யாதது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை உண்டாக்கியது.

Gill-Cinemapettai-1.jpg
Gill-Cinemapettai-1.jpg

ஷிகர் தவான்: ஐசிசி நடத்தும் போட்டிகள் என்றாலே ஷிகர் தவானுக்கு கொண்டாட்டம் ஆகிவிடும். ஒரு போட்டியில் விளையாடவில்லை என்றாலும் அடுத்த போட்டியில் நிலைத்து நின்று செஞ்சுரி போடக்கூடிய வீரர் தவான். இவரை சமீப காலமாகவே இந்திய அணித் தேர்வாளர்கள் புறக்கணித்து வருகின்றனர். அதற்கான கஷ்டங்களையும் தற்போது அனுபவித்து வருகின்றனர்.

Dhawan-Cinemapettai.jpg
Dhawan-Cinemapettai.jpg

மயங்க் அகர்வால்:  நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் கிட்டத்தட்ட 400 ரன்களுக்கு மேல் குவித்தவர் மயங்க் அகர்வால். இவர் பல போட்டிகளை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக வென்று கொடுத்துள்ளார். கேஎல் ராகுலுடன் ஓபனிங் இறங்கி அதிரடியாக ஆடக்கூடியவர். டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணிக்காக ஓபனிங் இறங்கும் அகர்வாலை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர் தேர்வாளர்கள்.

Agarwal-Cinemapettai.jpg
Agarwal-Cinemapettai.jpg

ஷிகர் தவான், மயங்க் அகர்வால், சுப்மன் கில் போன்ற மூன்று வீரர்களும் ஓபனர்கள் என்பதால் புறக்கணிக்கப்படுகிறார்களா அல்லது வேறு ஏதும் காரணம் இருக்கிறதா போன்ற கேள்விகள் ரசிகர்களை குழப்பமடைய செய்கின்றது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்