லண்டன்: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தான் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும், எரிச்சலை ஏற்படுத்தியது என்றும், இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் தைமல் மில்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் லீக் போட்டியில், கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில், கோலி, கெயில், டிவிலியர்ஸ், வாட்சன் என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே உள்ளடக்கிய பெங்களூரு அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

இந்நிலையில் இத்தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பெங்களூரு அணி, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர், தைமல் மில்ஸை அவரது அடிப்படை தொகையான ரூ. 1 கோடியில் இருந்து சுமார் 12 மடங்கு அதிகமாக கொடுத்து ரூ. 12 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் தைமல் மில்ஸ், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தனக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மில்ஸ் கூறுகையில்,’ ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. இந்த ஆறுவாரம் படாதபாடுபட்டுவிட்டேன். காயத்துக்காக ஸ்கேன் எடுத்ததில் அதிகளவில் பாதிப்பு இல்லை என்பது மட்டுமே எனக்கு ஆறுதலான விஷயம். பிளே ஆப் சுற்றுக்கு தகுதி கிடைக்காதது, என மற்ற எல்லா விஷயங்களுமே எனக்கு எரிச்சலை மட்டுமே ஏற்படுத்தியது. ‘ என்றார்.