Entertainment | பொழுதுபோக்கு
இந்திய வீரர்களின் ஜெர்சி நம்பர், அதை அவர்கள் தேர்வு செய்ததற்கான காரணம் தெரியுமா?
மகேந்திர சிங் தோனி- 7 :
தோனி என்றாலே நமக்கு நினைவுக்கு வரும் சில விஷயங்களில், மிக முக்கியமான ஒன்று அந்த நம்பர் 7. இந்த நம்பர் அவர் தேர்தெடுத்ததற்கான காரணம் அவர் பிறந்த தேதி 7/7/1981 என்றாலும், அதற்கு மற்றோரு காரணமும் உள்ளதாம். தோனி கால்பந்தாட்ட கிளப் ஆன மான்செஸ்டர் யுனைடெட்டின் தீவிர ரசிகராம். அந்த கிளப்பின் சிறந்த வீரர்கள் (ஜார்ஜ் பெஸ்ட், டேவிட் பெக்கம், கிறிஸ்டியானோ ரொனால்டோ) பலர் அணிந்தது நம்பர் 7 தானம்.

dhoni
விராட் கோஹ்லி- 18 :
விராத்தின் 18ஆம் நம்பர் முடிவுக்கு மிக பெரிய செண்டிமெண்ட் உள்ளதாம். அவரது தந்தை இறந்த தினம் 18 டிசம்பர் 2006 . அப்பொழுது அவரின் வயது 18. இந்த நம்பரை விராட் தன்னுயடைய இந்தியா யூ-19 அணியில் ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறார்.
ரோஹித் சர்மா – 45 :
இந்தியா யூ 19 அணியில் விளையாட தேர்வான பொழுது ஹிட் மேன் ரோஹித் ஷர்மாவுக்கு ஜோதிடர் குறித்து குடுத்த எண் 9.வெறும் ஒரு இளக்க நம்பரா; என்று இவர் யோசிக்க, இவருடைய அம்மா செலக்ட் செய்த எண் தான் 45 . இதன் கூட்டல் கணக்கு ஒன்பது வருவதால் ரோஹித்தும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாராம்.
யுவராஜ் சிங் – 12 :
தன் பிறந்த நாளான டிசம்பர் 12 என்ற செண்டிமெண்ட் காரணமாகவே அவர் இந்த நம்பர் பயன்படுத்த ஆரம்பித்தார். நம் நெட்டிசன்கள் சொல்லும் கொசுறு நியூஸ் என்னவென்றால், சண்டீகரில் அவர் பிறந்தது செக்டார் 12 என்று சொல்கிறார்கள்.
ரவீந்திர ஜடேஜா – 8 :
இவரின் லக்கி நம்பர் 12.எனினும் யுவராஜ் சிங் அந்த நம்பரை வைத்துக்கொண்டதால் இவர் தன் பிறந்தால் கூட்டுக் கணக்கை (6/12/1988, 6+12+1+9+8+8= 44. 4+4=8) வைத்து நம்பர் 8 ஐ எடுத்துள்ளார். இருந்தாலும் முன்பு ஐ பி ல் போட்டிகளில் கொச்சி, சென்னை அணிக்காக விளையாடிய பொழுது நம்பர் 12ஐ பயன் படுத்தியுள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்- 99 :
அஸ்வினின் பள்ளியில் அவரின் ரோல் நம்பர் 9. அந்த நம்பரே அவருக்கு பிடித்த நம்பர் ஆகிவிட்டது. இந்திய அணியில் சேர்ந்த பொழுது அந்த நம்பர் பார்திவ் பட்டேல் வசம் இருந்ததால் 99ஐ எடுத்துக்கொண்டாராம் அஸ்வின். அவரின் ட்விட்டர் கணக்கு கூட ashwinravi99.
அஜின்க்யா ரஹானே – 27 :
இவருடைய பாவரிட் நம்பரும் ஒன்பது தானம். அதனால் தான் 2+7=9 என்று 27ஐ எடுத்துக்கொண்டாராம் ரஹானே.
ஹர்டிக் பாண்டியா – 228 :
இந்திய கிரிக்கெட்டின் லேட்டஸ்ட் சென்சேஷன் பாண்டியா இந்த வித்யாசமான நம்பரை செலக்ட் செய்ததற்கு சூப்பர் கதை ஒன்றை சொல்கிறார்கள் பரோடாவில். பரோடா யூ 16 அணியில் விளையாடும் பொழுது ஒரு மேட்சில் அவர் டீம் 23 / 4 என்று இருந்த நிலையில் இவர் அடித்த ஸ்கோர் தான் இந்த 228.
