சாதனையிலும் ஒரு சோதனை, அவரிடமிருந்து எதிர்பார்க்காத மரண அடி.. கலங்கிய ஆஸ்திரேலிய வீரர்

ஆஸ்திரேலியா ஏ மற்றும் இந்திய அணி பங்குபெறும் பயிற்சி ஆட்டம் சிட்னியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

முதல் பயிற்சி ஆட்டம் போலவே இந்த ஆட்டத்திலும் இந்திய அணி மோசமாக சொதப்பியது. 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜஸ்பிரித் பும்ரா மட்டும் அதிரடியாக ஆடி 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த இளம் வீரர் கேமரூன் கிரீன் இன்று பும்ரா அடித்த பந்தில் தலை கலங்கி விழுந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பும்ரா 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேமரூன் கிரீன் பவுலிங் செய்தார். அவர் வீசிய அந்த பந்தை பும்ரா வேகமாக மிட் ஆன் திசை நோக்கி அடிக்க முயன்றார்.

ஆனால் அது நேராக பவுலரை நோக்கி சென்றது. பவுலிங் செய்த கேமரூன் கிரீன் மீது வேகமாக தாக்கியது. பல கிலோ மீட்டர் வேகத்தில் வந்த பந்து கேமரூன் கிரீன் தலையில் அடித்தது. இதில் அவர் கீழே விழுந்து துடித்து போனார்.

Cameron-Green-Cinemapettai-1.jpg
Cameron-Green-Cinemapettai-1.jpg

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கேமரூன் கிரீன் பாதியில் வெளியேறினார். இந்த தொடரில் மீதம் உள்ள பயிற்சி ஆட்டத்தில் இருந்தும் இவர் வெளியேறி உள்ளார். இவருக்கு பதிலாக பாட்ரிக் ராவ் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டள்ளார். இந்த போட்டியை பார்த்துக்கொண்டு இருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Jaspirit-Bumrah-Cinemapettai.jpg
Jaspirit-Bumrah-Cinemapettai.jpg