Connect with us
Cinemapettai

Cinemapettai

indian2-news-photos-stills

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இவங்கள நம்புனா வேலைக்கே ஆகாது.. இந்தியன் 2 படத்தை இரண்டா பிரிச்சிடலாம்.. ஷங்கர் முடிவு

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் முடிந்தவுடன் கமலஹாசன் முழுநேரமாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் கமலஹாசனின் கூட்டணியில் இந்தியன் 2 படம் உருவாகிக்கொண்டிருக்கிறது. இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், ராகுல் ப்ரீத்தி சிங், சமுத்திரக்கனி, விவேக் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

சென்னையில் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தினால், மூன்று உயிரை காவு வாங்கியது. இந்த நிலையில் படம் வெளிவருமா.? வராதா.? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்தனர்.

கமலஹாசன், ஷங்கர், லைகா ஆகிய மூவருக்கும் இடையே பல பிரச்சினைகள் உருவெடுத்தது. இதெல்லாம் ஒருபுறமிருக்க கொரோனாவின் பாதிப்பினால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.

இப்படி இந்தியன் 2 படக்குழுவை விதி சுழட்டி சுழட்டி அடித்தது என்றே கூறலாம். தற்போது, தமிழக அரசு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளைத் தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் படிப்படியாக வேலையை தொடங்க ஆரம்பித்துள்ளது இந்தியன் 2 படக்குழு. இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்று சங்கர் முடிவு செய்துள்ளாராம்.

ஏனென்றால் எடிட்டிங் இல்லாமலேயே 5 மணிநேரம் ஓடுவதாக படத்தின் நேரத்தை கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் இந்தியன்-2 படத்தின் மூன்றாவது பாகம் அடுத்த வருடத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவின் பாதிப்பு படிப்படியாக குறைந்த பின் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
To Top