Connect with us
Cinemapettai

Cinemapettai

tamil movies

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்திய திரைப்படங்கள் என்றால் சீன அதிபருக்கு உயிராம்… வெளியான சூப்பர் தகவல்

சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு இந்திய திரைப்படங்கள் பார்ப்பதென்றால் கொள்ளைப் பிரியம் என அந்நாட்டு தூதர் லூ தெரிவித்திருக்கிறார்.

பாலிவுட் திரைப்படமான தங்கல் சீனாவில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. நித்தேஷ் திவாரி இயக்கியிருந்த இந்த படம் ஹரியானாவில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. மல்யுத்த போட்டிகளில் சாதிக்க முடியாமல் போன தந்தை ஒருவர், தனது மகள்கள் மூலம் கனவை நினைவேற்றுவார். அவரையும், அவரது மகள்களைச் சுற்றியும் திரைக்கதை நகர்ந்தது. இதில், தந்தை கேரக்டரில் அமீர் கான் நடித்திருந்தார். மல்யுத்த வீரராக கெத்து காட்டுவது, 40 வயதைத் தாண்டிய மிடில் கிளாஸ் ஆணாக முறைப்பது என இருவேறு சூழ்நிலைகளைத் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.

தங்கல் படம் 2016-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையைக் குறிவைத்து வெளியானது. இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலக நாடுகளிலும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வந்தது தங்கல். உலக அளவில் 2,000 கோடி ரூபாய் வசூலித்து தங்கல் புதிய சாதனையைப் படைத்தது. குறிப்பாக சீனாவில் மட்டுமே ஆயிரம் கோடி ரூபாய் வசூலை அள்ளியது. இந்த இமாலய இலக்கை எட்டிய முதல் படம் என்ற சாதனையும் தங்கல் படம் படைத்தது.

இந்தநிலையில், தங்கல் படத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் பல முறை பார்த்திருப்பதாக இந்தியாவுக்கான அந்நாட்டுத் தூதர் லூ தெரிவித்திருக்கிறார். இந்தியா – சீனா உறவு தொடர்பாக டெல்லியில் உள்ள சீன தூதரகம் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தலைமை உரையாற்றிய லூ, `அதிபர் ஜி ஜின்பிங் இந்திய படங்களின் தீவிர ரசிகர். அதிலும் குறிப்பாக பாலிவுட் படங்கள் அவரின் மனதுக்கு நெருக்கமானவை.

tamil-movie

சீனாவில் பாலிவுட் படங்கள் பிரபலமாக அதிபர் ஜி ஜின்பிங் முக்கியக் காரணம். அமீர் கான் நடித்திருந்த தங்கல் படத்தை பல முறை அவர் பார்த்திருக்கிறார். பாலிவுட் படங்களின் தீவிர ரசிகரான அவரைப் பின்பற்றி இளைஞர்கள் பலரும் படங்கள் பார்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்கல், பாகுபலி – 2 மற்றும் இந்தி மீடியம் உள்ளிட்ட படங்கள் சீனாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகின்றன’ என்று புகழ்ந்து பேசினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top