தமிழ் சினிமா தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது கிரிக்கெட் வீரர்களும் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு சினிமாவில் நடித்து வருகின்றனர். அந்த அந்த வகையில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மலையாள சினிமாவில் அறிமுகமானார். மேலும் ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தற்போது சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் டிக்கிலோனா திரைப்படத்தில் நமது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ஹர்பஜன்சிங் அறிமுகமாக உள்ளார். சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் எப்போது ஏலத்தில் எடுக்கப்பட்டாரோ அப்போதிருந்து தமிழில் ட்வீட் போடுவதும், தமிழ் படங்கள் மற்றும் தமிழ் ஸ்டார்களைப் பற்றி அவ்வப்போது பேசி வந்தார்.
இதனால் அவரை தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறது அந்த படக்குழு. இதனை அவர்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அடுத்த அப்டேட் :

அதேபோல் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் புதிய படமொன்றில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் நடிக்க இருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்சன் சம்பந்தப்பட்ட கதையில் ஒரு கிரிக்கெட் வீரர் நடிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அஜய் ஞானமுத்து ஒரு திறமையான இயக்குனர் என்பதால் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தனது ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.