Tamil Cinema News | சினிமா செய்திகள்
புள்ளைங்கோ.. மஜா பன்றோம்.. விக்ரம் 58 இல் நடிக்கும் இர்பான் பதானின் ட்விட்டரில் தமிழில் ஸ்டேட்டஸ்
நம் கோலிவுட்டில் தொடர்ச்சியாக கிரிக்கெட் வீரர்கள் அறிமுகமாகி வருகின்றனர். வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் டிக்கிலோனா திரைப்படத்தில் நமது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ஹர்பஜன்சிங் அறிமுகமாக உள்ளார்.
அடுத்ததாக அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் நடிக்க இருக்கிறார்.

vikram 58
இதன் அறிவிப்பு நேற்று வெளியானது.
Warm welcome to all the people out there. Thank you for the amazing response.
Am very much looking forward to join with Vikram, ARR & director Ajay. Keep continuing your support. Thank you.
Let's enjoy together.
— Irfan Pathan (@IrfanPathan) October 15, 2019
இந்நிலையில் இன்று இர்பான் தட்டியுள்ள அட்டகாச ஸ்டேட்டஸ் இதோ …
என் அன்பான புள்ளைங்கோ எல்லாத்துக்கும் வணக்கம்🙏🙏, நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி… நடிகர் #vikram , இசைப்புயல் @arrahaman மற்றும் இயக்குனர் @ajaygnanamuthu உடன் #Chiyaan58 இணைய ஆவலுடன் காத்திருக்கிறேன்🥳🥳 . உங்களுடைய ஆதரவு தொடரட்டும், நன்றி🙏🙏
மஜா பன்றோம்…— Irfan Pathan (@IrfanPathan) October 15, 2019
