Connect with us
Cinemapettai

Cinemapettai

இரண்டு வருடங்களாக இந்திய அணியில் இருக்கும் பிரச்சனைக்கு இவரே காரணம்.! களையெடுக்க காத்திருக்கும் புதிய நிர்வாகம்!

BCCI-Cinemapettai-2.jpg

Sports | விளையாட்டு

இரண்டு வருடங்களாக இந்திய அணியில் இருக்கும் பிரச்சனைக்கு இவரே காரணம்.! களையெடுக்க காத்திருக்கும் புதிய நிர்வாகம்!

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த சில வருடங்களாக இருக்கும் பிரச்சனைகள் அனைத்திற்கும் அணியின் முக்கியமான நிர்வாகி ஒருவர் தான் காரணம் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டில் முதன்மையாக இருந்து வரும் இந்திய அணி கடந்த சில மாதங்களாக கொஞ்சம் சரிவை சந்தித்து இருக்கிறது. அணி நிர்வாகம் எடுத்த சில தவறான முடிவுகளால் இந்திய அணி கொஞ்சம் கொஞ்சமாக தோல்வி அடைந்து வருகிறது.

உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து இந்திய அணிக்கு பிரச்சினை என்று பார்த்தால் அது மிடில் ஆர்டர் பேட்டிங் மற்றும் 5வது பவுலர் தான். யுவராஜ் சிங் சென்ற பின் இந்தியா அணியில் மிடில் ஆர்டரில் ஆடுவதற்கு சரியான வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

அதுமட்டுமின்றி 5வது முழு நேர பவுலர் இல்லாமல் இந்திய அணி கஷ்டப்பட்டு வருகிறது. மூன்று ஸ்பீட் பவுலர்களை தேர்வு செய்தால் ஒரே ஒரு முழு நேர ஸ்பின் பவுலரை மட்டுமே இந்திய அணி தேர்வு செய்கிறது. கூடுதலாக ஒரு பவுலரை கொண்டு வந்தால் ஒரு பேட்ஸ்மேன் இன்றி விளையாடும் கட்டாயத்தில் உள்ளது.

இந்திய அணியில் இப்படி நிலவி வரும் பிரச்சனைக்கு அணியின் தேர்வு குழு தலைவராக இருந்த எம் எஸ் கே பிரசாத்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

மிடில் ஆர்டரில் நல்ல பேட்ஸ்மேனை தேர்வு செய்யாததும் ஆல்ரவுண்டர்களை கண்டு பிடிக்காததும், சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்களை புறக்கணித்ததும், முதல் தர போட்டிகளின் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்யாததும் என்று இவர் மீது நிறைய புகார் உள்ளது.

MSK-Prasad-Cinemapettai.jpg

MSK-Prasad-Cinemapettai.jpg

இவர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதிலிருந்தே இவர் மீது நிறைய விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஒரு அனுபவம் இல்லாத வீரரை எப்படி தலைவராக தேர்ந்தெடுக்க முடியும் என அப்போதே பேசப்பட்டது. எது எப்படியோ இப்போது இந்திய அணி கஷ்டத்தில் இருந்து மீண்டு வருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top