Sports | விளையாட்டு
இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் இவர்தான்.. ரவி சாஸ்திரிக்கு அல்வா.. கங்குலி, சேவாக் வாய்ப்பே இல்லை
உலகக் கோப்பை போட்டியின் தோல்விக்குப் பின் இந்திய அணியின் பல மாற்றங்கள் நடந்து வருகிறது. அதில் முக்கியமான மாற்றம் இந்தியாவின் தலைமை பயிற்சியாளர். தற்போது ரவிசாஸ்திரி இருந்து வந்தாலும் அவருடைய பதவி காலம் இந்த உலக கோப்பையில் முடிவடைகிறது. மேலும் அவர் தொடர மாட்டார் என்றே தெரிகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிறிஸ்டன், ஜெயவர்த்தனே, டாம் மூடி போன்ற பல வெளிநாட்டு வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர், ஏன் இவ்வளவு போட்டி என்றால் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு வருபவர்களுக்கு வருமானம் மிக பெரிய அளவில் இருக்கும். அதுவும் இல்லாமல் உலகில் பல கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஒரு அணி இந்திய அணி அதனால் சரியாக கையாளக்கூடிய நபர்தான் வேண்டும்.
விண்ணப்பித்தவர்களில் யார் தேர்வு ஆவார்கள்? கோலி கேப்டனாக இருந்ததினால் ரவி சாஸ்திரிக்கு அந்த பதவி வழங்கப்பட்டது. ஏனெனில் இவர்கள் இருவருக்கும் உள்ள நெருக்கம். அதேபோல் கோலி கதை முடித்து இப்பொழுது ரோகித் சர்மா அலை அடிப்பதால் ரோகித்துக்கு வேண்டியவர் வருவார்.
ரோகித்க்கு நெருக்கமாக இருப்பவர் ஜெயவர்த்தனே ஏனென்றால் இவருடைய மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்தவர் ஜெயவர்த்தனே எனவே இருவருக்கும் நல்ல பழக்கம் உள்ளது. அதனால் ஜெயவர்த்தனேக்கு இந்த வாய்ப்பு வர நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
கங்குலி, சேவாக் போன்றவர்கள் விண்ணப்பிக்கவே முடியாது ஏனெனில் பயிற்சியாளர் பதவிக்கு தேவையான விதிகள் மூன்று உள்ளது. ஒன்று 30 டெஸ்ட் போட்டிகள் அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.
இரண்டாவது, குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கோ அல்லது மூன்று ஆண்டுகள் உள்ளூர் அணிக்கோ பயிற்சி அளித்து இருக்க வேண்டும். இந்த இரண்டாவது விதி தான் சிக்கல். அதில் இருவருக்கும் பொருந்தவில்லை எனவே அவர்கள் விண்ணப்பிக்க கூட முடியாது.
