இந்திய இளம் கிரிக்கெட் வீரர் ஊக்க மருந்தில் சிக்கினார்.. அடேய் அப்பனா இத்தனை நாள் போதைலதான் விளையாடுனியா?

தற்போதைய இந்திய அணியில் இளம் வீரர்கள் பெரும்பாலானோர் அறிமுகமாக துவங்கிவிட்டனர். அந்த வகையில் கடந்த 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியின் கேப்டனான பிரித்வி ஷா கூடிய விரைவில் அதுவும் தனது 18 வயதிலேயே இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார்.

இவர் அறிமுகமான டெஸ்ட் தொடர்களில் அதிரடியாக ஆடி பல ரன்களை குவித்ததன் மூலம் இந்திய ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் இவர் இடம் பெற்றிருந்தார். ஆனால் துர்த்தஷ்ட வசமாக தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தினை இவர் பயன்படுத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனால் இவரை பிசிசிஐ 8 மாதங்களுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை செய்தது. வளர்ந்து வரும் இளம் வீரரான இவர் இந்த வயதிலேயே இப்படி சிக்கிவிட்டாரே என கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இவரின் தடைக்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment