Sports | விளையாட்டு
கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே காதலிக்கும் தமிழ் நடிகை யார் தெரியுமா? விரைவில் திருமணமாம்
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மணீஷ் பாண்டே. 30 வயதாகும் இவருக்கு தமிழ் படங்களில் நடித்த பிரபல நடிகை அர்ஷிதா செட்டி உடன் வருகிற டிசம்பர் 2ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மனிஷ் பாண்டே கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார். இந்திய அணியின் நம்பர் 4 பேட்ஸ்மேனாக விளையாடியவர். ஆனால் நிறைய வாய்ப்புகள் கிடைக்காமல், கிடைக்கும் வாய்ப்புகளில் அவ்வப்போது சொதப்பி இருந்ததால் அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியவில்லை.
இதனால் உள்ளூர் போட்டிகள் மற்றும் விஜய் ஹசாரே டிராபி போன்ற போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வந்தார். ஐ.பி.எல் போட்டிகளில் முதல் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
இந்நிலையில் உதயம் nh4,ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் ஆகிய படங்களில் நடித்த 26 வயதான அர்ஷிதா செட்டியுடன் காதல் வயப்பட்டு இருந்தார். தற்போது இரு வீட்டாரின் சம்மதத்தோடு வருகிற டிசம்பர் இரண்டாம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்த்துக்கள் மணமக்களே..

manish-arshitha
