Sports | விளையாட்டு
இந்திய அணியின் வளர்ச்சிக்கு இவர் ஒருவர் மட்டுமே காரணம்.. யாரை சொல்கிறார் ஷோயப் அக்தர்?
ஒரு காலத்தில் சூதாட்டத்தில் சிக்கி இருந்த இந்திய அணியை கட்டுக்கோப்புக்குள் கொண்டு வந்த கேப்டன் யார் என்றால் அது கங்குலி தான். இவர் 2002-ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களை அதிரடியாக கொண்டு வந்தார்.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் கங்குலி ஒரு கில்லி. அந்த ஒரு காரணத்தினால் தான் ஷேவாக், யுவராஜ், ஜாகிர் கான், முகமது கைப், மகேந்திர சிங் தோனி ஆகியோர் நட்சத்திர வீரர்களாக ஜொலித்தனர். ஒவ்வொரு இளம் வீரரின் மீதும் நம்பிக்கை வைப்பது கங்குலிக்கு மட்டுமே உரித்தான செயல்.
இந்நிலையில் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமையாக கருதப்படும் பிசிசிஐயின் தலைவராக கங்குலி பொறுப்பேற்றார். இதற்கு பல்வேறு முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சோயப் அக்தர் வாழ்த்துக் கூறிய தாவது, இந்திய அணியின் தலையெழுத்தை மாற்றியது கங்குலி மட்டுமே.
1997-98 காலகட்டத்தில் இந்திய அணியால் பாகிஸ்தான் அணியை ஒருபோதும் வெல்ல முடியாது என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில், அதை சுக்குநூறாக உடைத்து காட்டியவர் கங்குலி மட்டுமே என தனது யூடியூப் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.
