இன்று பாலுமகேந்திராவின் நினைவு நாள். இந்திய சினிமா உனை மறவாது தமிழா என்று உலக நாயகன் கமல் ஹாஸன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமா வரலாறு இருக்கும் வரை பாலு மகேந்திராவின் பெயரும் இருக்கும். சிறந்த இயக்குனர், ஒளிப்பதிவாளராக இருந்தவர். காலத்தால் அழியாத பல படங்களை கொடுத்தவர்.

மகேந்திரன், மணிரத்னம் ஆகிய 2 மேதைகளை உருவாக்கியவர் பாலு மகேந்திரா என்று இயக்குனர் மிஷ்கின் ஒரு முறை தெரிவித்தார். அத்தகைய பாலு மகேந்திரா இறந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பாலு மகேந்திராவை நினைவுகூர்கிறேன். நண்பர்கள் தவிர்த்து இந்தியா சினிமா உங்களை மிஸ் செய்கிறது. இன்று பாலுமகேந்திராவின் நினைவு நாள். இந்திய சினிமா உனை மறவாது தமிழா என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/ikamalhaasan/status/831040221554700288