Tamil Cinema News | சினிமா செய்திகள்
2019 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளில் அதிகம் வசூல் செய்த படங்களின் லிஸ்ட்.. வருத்தத்தில் தல ரசிகர்கள்
சமீபகாலமாக இந்திய சினிமாக்கள் உலகளாவிய வியாபாரத்தில் பெரும் பங்காற்றி வருகின்றனர். அந்த வகையில் கடந்த வருடம் ஐக்கிய அரபு நாடுகளில் இந்திய சினிமாக்கள் பெரிய அளவில் வசூல் சாதனைகள் படைத்துள்ளது.
அந்த வகையில் முதலிடத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த லூசிபர் $3.61 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் வார்($2.87 M), மூன்றாவது இடத்தில் சாஹோ($1.70 M) ஆகிய படங்களும் இருக்கின்றன.
தொடர்ந்து நான்காவது இடத்தில் தபாங் 3($1.53 M), ஐந்தாவது இடத்தில் தளபதி விஜய்யின் பிகில்($1.52 M), ஆறாவது இடத்தில் ஹவுஸ்புல்4($1.24 M) ஆகிய படங்களும் இடம் பெற்றுள்ளன. தலைவர் ரஜினியின் பேட்ட($1.15 M) படம் வசூல் செய்து ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளது.
தல அஜித் நடித்த விஸ்வாசம்($650K) வசூல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தளபதி விஜய் முதல் இடத்திலும், மொத்த இந்திய சினிமாவில் மோகன்லால் முதல் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
Top #UAE 2019 Grosses:#Lucifer – $3.61 Million#WAR – $2.87 Million #Saaho – $1.70 Million #Dabanng3 – $1.53 Million* #Bigil – $1.52 Million #Housefull4 – $1.24 Million #KumbalangiNights – $1.23 Million #MissionMangal – $1.18 M#Petta – $1.15 M#Viswasam – $650K
— Ramesh Bala (@rameshlaus) January 4, 2020
