World | உலகம்
உலகில் வலிமையான நாடாக உருவெடுக்கும் இந்தியா.. சொல்வது எந்த நாடு தெரியுமா?
உலகில் வலிமையான நாடாக உருவெடுக்கும் இந்தியா
சிங்கப்பூரை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் கார் கேம் இந்தியா பொருளாதார சக்திகளில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர், தொழில்நுட்பம் மற்றும் சமூகம் சார்ந்த வளர்ச்சியில் முன்னணி நாடாக இந்தியா விளங்குகிறது. இதனால் வலிமை பெற்ற பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.
அதற்கு சான்றாக ஆதார் திட்டம் இந்தியாவில் வெற்றிகரமாக அமல்படுத்தி விட்டனர், நோயாளிகள் பதிவை அனைத்து ஆவணங்களை பெறுவதில் டிஜிட்டல் மயமாக்கி நாட்டு மக்களுக்கு நல்லதொரு சேவையை செய்து வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில் ஏற்படும் பயன்பாட்டினை இந்தியா மற்றும் சிங்கப்பூர் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இறுதியாக மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான விஷயத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் எழுதியுள்ளார்.
