India | இந்தியா
சீனாவை நோக்கி படையெடுக்கும் இந்திய ராணுவம்.. பீதியில் மக்கள்
சீனாவில் கொரோனா வைரஸ் அதிகமாக தாக்கியுள்ள வுஹானில் இருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக தனிப்படை கொண்ட விமானம் இன்று டெல்லியில் இருந்து புறப்படுகிறது.
இதுவரை சீனாவில் 2000க்கும் மேல் கொரோனா வைரசால் உயிர் இழந்திருக்க கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 75 ஆயிரத்துக்கும் மேலாக மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே முதல் கட்டமாக 324 பேரை சீனாவிலிருந்து விமானம் மூலம் அழைத்து வந்தனர், இரண்டாம் கட்டமாக 300 இந்தியர்களை ராணுவத்தின் உதவியால் அழைத்து வரப்பட்டது.
இந்த வைரஸ் மற்ற நாடுகளிலும் பரவி இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. சீனாவில் இன்னும் நூற்றுக்கும் மேலான இந்தியர்கள் வெளிவர முடியாமல் அவதியில் உள்ளனர். இவர்களை இந்திய ராணுவம் இன்று மீட்பதற்காக செல்கிறது.
எல்லாவிதமான முதல் உதவியுடன் இந்த விமானம் செல்வதாகவும், பாதுகாப்பான வளையத்தில் வைத்து மக்களை மீட்டு கொண்டு வருவதாக விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.
