Connect with us

Cinemapettai

அடிச்சி தூக்க தயாராகும் இந்திய கடற்படை.. உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்

indian-defence-exercises-2019

India | இந்தியா

அடிச்சி தூக்க தயாராகும் இந்திய கடற்படை.. உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இந்திய கடற்படை தனது போர்க் கப்பல்கள் உடன் உஷார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் வகையிலான சட்ட பிரிவு 370 சமீபத்தில் நீக்கம் செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் இந்தியாவுடன் வர்த்தக மற்றும் தூதரக ரீதியான உறவுகளை முறித்துகொண்டது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும், எதிரொலியாக பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கடல் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில் தீவிரவாதியின் ஊடுருவலை முறியடிக்கும் விதமாக இந்திய கடற்படை உஷார் நிலையில் இருப்பதாகவும், கடற்பகுதியில் போர்க்கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top