Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை.. காரணம் கேட்டு அதிர்ந்து போன திரை உலகம்
அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை நடிகர் நடிகைகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதின் மர்மம் தற்போது வரை புரியவில்லை. புகழின் போதையில் இருந்து வருபவர்கள் அதிலிருந்து சற்று இறங்கி விட்டால் போதும். மன உளைச்சலில் போதைக்கு அடிமையாகி விடுவார்கள் அல்லது தற்கொலை செய்வதை போன்ற விபரீத முடிவுகளை எடுத்து விடுகிறார்கள்.
அப்படி ஒரு விஷயம் தான் பிரபல நடிகை விஷயத்தில் நடந்துள்ளது. பெங்காலியில் துணை நடிகையாக நடித்தவர் சுபர்ணா ஜாஷ். துணை நடிகையாக மட்டுமல்லாமல் கதாநாயகியாகவும் சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் பெங்காலியில் மயூரங்கி என்ற படம் வெளியாக இருந்தது.
இந்த படத்திற்கு பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அவருக்கு அப்படி எதுவும் அமையவில்லை. இதனால் சில நாட்களாக மன உளைச்சலில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இறுதியில் தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துவிட்டார்.
இந்த செய்தி பெங்காலி நடிகர் நடிகைகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு சுபர்ணா ஜாஷ் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வரும் போலீசார் இது உண்மையிலேயே தற்கொலையா அல்லது யாரேனும் தூண்டப்பட்ட செயலா என விசாரித்து வருகின்றனர்.
