Connect with us
Cinemapettai

Cinemapettai

indian-2-kamal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காத்து வந்த இந்தியன் 2 ரகசியத்தை லீக் செய்த காஜல்.!

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் என்று அனைவருக்கும் தெரியும், இவர் ரஜினியின் 2.0 படத்தைத் தொடர்ந்து தற்போது கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க இருக்கிறார், இந்தியன் 2 படத்தை இயக்குவதில் லைக்கா நிறுவனத்திற்கும் ஷங்கருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனால் சங்கர் படத்தை வேறொரு நிறுவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்தார், ஆனால் லைக்கா நிறுவனமும் விட்டுக் கொடுப்பது போல் தெரியவில்லை ஷங்கருக்கு முட்டுக்கட்டை போட்டது, அதாவது படத்தை நீங்கள் வேறு ஒரு நிறுவனத்திடம் தயாரிக்கலாம் ஆனால் கமல் சபாஷ் நாயுடு திரைப்படத்திற்காக வாங்கிய 35 கோடியும் இந்தியன்-2 விற்கு செலவு  செய்யப்பட்ட 65 கோடியும் சேர்த்து ஆக மொத்தம் 90 கோடியை செட்டில் செய்துவிடுங்கள் என ஆப்பு வைத்தது, அதனால் ஷங்கர் ஆடி போய் விட்டார்.

உடனே சங்கர் லைக்கா விடமே படத்தை எடுப்பதாக முடிவெடுத்துவிட்டார், விரைவில் தொடங்க இருக்கிறது இந்தியன் 2 இந்த நிலையில் படத்தில் கமிட் ஆன காஜல் அகர்வால் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார் அதில் காஜல் அகர்வால் இந்தியன் 2 விற்காக ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து கால்ஷீட் வாங்கி இருப்பதாக கூறியுள்ளார், இப்படி காத்து வந்த ரகசியத்தை பேட்டியில் கூறி உடைத்து விட்டார் காஜல்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top