Connect with us
Cinemapettai

Cinemapettai

shankar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மகள் கல்யாணம் முடிந்த கையோடு ஏழரை கூட்டிய இந்தியன் 2.. பெரும் சோகத்தில் ஷங்கர்!

தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இயக்குனர் ஷங்கர் கமலஹாசன் கூட்டணியில் திரைக்கு வந்த வெற்றிப்படம் “இந்தியன்”.

இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் படமாக்கப்பட்டு வந்தது. சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் கிரேன் விழுந்து படப்பிடிப்பு தளத்தில் விபத்து நடந்தது அதற்காக சில நாட்கள் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

பிறகு கோவிட் பொதுமுடக்கம் திரைப்பட சூட்டிங்குகளுக்கான அனுமதி மறுப்பு என பல்வேறு காரணங்களுக்காக இப்போது வரை படப்பதிவு நிறுத்திவைக்கப்பட்ட நிலையில்.

இப்போது இயக்குனர் ஷங்கர் அவரின் அடுத்தடுத்த படங்களுக்கான அப்டேட்களை வெளியிட்டார். அதனை அடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா இன்டர்நேசனல் இயக்குனர் ஷங்கரின் மீது வழக்கு தொடரந்தது.

இந்தியன் 2 படத்தினை எடுத்து முடிக்காமல் அவர் வேறு எந்த படத்தினையும் இயக்கக்கூடாது என்று கூறியது. ஷங்கர் தரப்பில் கூறப்பட்ட பதில்கள் திருப்தி அடையாததால் இப்பிரச்சினைக்காக மத்தியஸ்தரை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தது நீதி மன்றம்.

இருவருக்குமான பொதுவாதியாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த தீர்ப்பிற்காக “விக்ரம்” படக்குழுவும் காத்திருக்கிறது.

indian2-cinemapettai

indian2-cinemapettai

Continue Reading
To Top