Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த கதையே வேணாம் ஆள விடுங்க.. இந்தியன் 2 படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை
லைகா தயாரிக்கும் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்துக்கொண்டிருக்கும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு பிறகு தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
பண பிரச்சனையால் சிறிது காலம் தள்ளி வைத்துள்ளார். மற்ற சில நடிகர்களின் கால்சீட் வீணாவதால் என்ன செய்வது என்று தெரியாமல் படக்குழுவினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
அந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யபட்டிருந்தார். இந்தியன் 2 படத்திற்காக கொடுத்த தேதிகளில் படப்பிடிப்பு நடக்காமல் தள்ளிப்போக மறு தேதிகளை தருமாறு ஐஸ்வர்யா ராஜேஷிடம் படக்குழுவினர் கேட்டுள்ளனர். இவர்கள் கேட்ட தேதிகளில் மற்ற படங்களுக்கு கொடுத்துவிட்டதால் தேதிகளை மாற்றி தருகிறேன் எனக் கூறியுள்ளார்.
இதை ஏற்காத படக்குழுவினர் வேற ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்வதாக கேள்விப்பட்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நான் உங்கள் படத்தில் இருந்து விலகி கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே சில நடிகர்கள் இந்தப் படத்தில் இருந்து விலகியதால் இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் விலகியது ஒட்டுமொத்த படக்குழுவினரை அதிர்ச்சியாக உள்ளது.
