Photos | புகைப்படங்கள்
பூஜையுடன் துவங்கியது இந்தியன் 2 . லைக்ஸ் குவிக்குது போட்டோ. இடது கண் சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் ?

இந்தியன் 2
ரஜினியுடன் எந்திரன், 2 .0 முடித்த பின்பு இயக்குனர் ஷங்கர் கமல் அவர்களுடன் இந்தியன் பார்ட் 2 வில் இணைந்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் பட அறிவிப்பு வந்தது. கமலின் கடைசி படம், தயாரிப்பாளர் மாற்றம், சிம்பு இணைகிறார், இசைப்புயல் தான் இப்படத்துக்குமா, வில்லன் அக்ஷ்ய் குமார் தானா என ஷங்கர் படத்தின் திரைக்கதை போலவே பல ட்விஸ்டுகள் இருந்தது இந்த இந்தியனில்.
பொங்கலை முன்னிட்டு, எந்த வித அறிவிப்புமின்றி முதல் லுக் போஸ்டருடன், ஷூட்டிங் 18 துவங்குகின்றது என அறிவித்தார் ஷங்கர்.
டீம் விவரம்

indian 2
லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. கமலுடன் காஜல் அகர்வால் நடிக்கிறார். அனிருத் இசை . ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும் லக்ஷ்மி சரவணகுமார் எழுதுகின்றனர். பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்களுடன் நம் பீட்டர் ஹெய்ன் அவர்களும் ஸ்டண்ட் பணிகளை கவனிக்கிறார்.
நேற்றும் படத்தின் சில போஸ்டர்கள் பூஜைக்கு முன்பே வெளியானது. இந்நிலையில் பெரிதும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் லைக்கா நிறுவனம் ஒற்றை போடவை மட்டும் தங்கள் ட்விட்டரில் பதிவேற்றி பட பூஜை என சிம்பிளாக முடித்துவிட்டனர்.

Indian 2
விரைவில் மற்ற நடிகர், நடிகைகள் லிஸ்ட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தியன் தாத்தாவாக கமல் யூனிபார்மில் தன் கெட் – அப் மேக்கப்புடன் இருந்தது பலரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியுள்ளார் கமல்.
Happy #Indian2 Day! Official #Pooja Still! #PositiveVibes ??? pic.twitter.com/Xf25FlcWTU
— Lyca Productions (@LycaProductions) January 18, 2019
விரைவில் தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகள் இருக்கும் என்பதால், இப்படத்தை, அதாவது கமலின் பகுதிகளை மட்டுமாவது இயக்குனர் ஷங்கர் சீக்கிரம் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

indian2-villain
இதுவரை வெளியான அணைத்து போஸ்டர்களிலும் கமலின் இடுது கண் மறைக்கப்பட்ட உள்ளது. அது என்ன காரணம் என தெரியவில்லை. எனினும் பூஜை போட்டோவில் எந்த க்ளுவும் இல்லை என்பதே வருத்தும்.
