Tamil Cinema News | சினிமா செய்திகள்
கமலுடன் இந்தியன்-2 படத்தில் நடிக்க இருக்கும் பிரபல நடிகை.?
Published on

1996 ம் ஆண்டு கமல், மனிஷா கொய்ராலா, சுகன்யா,நாசர்,கவுண்டமணி, செந்தில் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த திரைப்படம் இந்தியன் இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தான் தயாரித்தார், படத்தை ஸ்ரீ சூர்யா மூவிஸ் வெளியிட்டது, இத்ன்ஹா திரைப்படம் 1995 ல் வெளியான பாட்ஷா படத்தின் வசூலை முறியடித்தது.
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்குனர் ஷங்கர் எடுக்க உள்ளார். இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த கமல்ஹாசன் தான் 2ம் பாகத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என தகவல் வெளியானது அதன் பிறகு எந்த அறிவிப்பும் வரவில்லை.
இந்நிலையில் கமலுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
