Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்தியன்2 வில் களமிறங்கும் வைகை புயல்… என்ன ஆனது ஷங்கருடனான பஞ்சாயத்து

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் இந்தியன் 2 படத்தில் காமெடி நடிகராக வடிவேலு ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கமல்ஹாஸன் இரட்டை வேடத்தில் நடித்து பெரிதும் வெற்றிபெற்ற திரைப்படம் கமல்ஹாசன். சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் அவரது மகன் சந்துருவாகும் கமல்ஹாசன் நடித்துள்ளார். திரைப்படத்தின் ஆரம்பம் முதலே வர்மக்கலை மூலம் பாரிய குற்றங்கள் புரிபவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். இக்கொலைகளை ஆராய்ந்த காவல்துறை இதற்கெல்லாம் ஒரு சுதந்திர போராட்ட தியாகி தான் காரணம் என்பதை கண்டுபிடிக்கின்றனர். இந்த வகையில், லஞ்சம் என்ற கதை பின்னணி ஷங்கர் அழகாக காட்சிப்படுத்தி இருந்தார். படமும் மாஸ் ஹிட் அடித்தது. மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. கமல் நடிப்பில் இப்படத்தை மீண்டும் ஷங்கரே இயக்குகிறார். அனிருத் இசையமைக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்நிலையில், படத்தில் காமெடி நடிகராக வடிவேலு ஒப்பந்தமாகி இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வடிவேலு நடிப்பில் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகத்தை தயாரிக்க இயக்குநர் ஷங்கர் முடிவு செய்தார். இதற்காக பிரம்மாண்டமாக செட் பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு இருந்தது. படப்பிடிப்பு தொடங்க இருந்த சமயத்தில், இயக்குநர் சிம்பு தேவனுக்கும் வடிவேலுவுக்கும் ஏற்பட்ட மோதலால் படப்பிடிப்பு நின்று போனது. பஞ்சாயத்து தயாரிப்பாளர் சங்கம் வரை சென்றது. இதையடுத்து, நஷ்ட ஈடாக 9 கோடி ரூபாய் வடிவேலு தர வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குநர் ஷங்கர் முறையிட்டார். இதற்காக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால், நடிகர் வடிவேலுவிற்கு ரெட் கார்டு விழும் என எதிர்பார்க்கப்பட்டது. இதைதொடர்ந்து வடிவேலு தரப்பிலும் நஷ்ட ஈடு கோரப்பட்டது.

இந்நிலையில், இறுதியாக இப்பிரச்சனைக்கு தயாரிப்பாளர் சங்கம் பெரிய முற்றுப்புள்ளியை வைத்து இருக்கிறது. தன்னால் இயக்குநர் ஷங்கருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட இந்தியன் 2 படத்தில் நடிக்க கணிசமான கால்ஷூட்டை வடிவேலு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top