fbpx
Connect with us

லைகாவுக்கு கெடு விதித்த ஷங்கர்.. இந்தியன் 2 படத்தை தலை முழுக போகிறாரா?

indian-2-dropped-lyca-cinemapettaiindian-2-dropped-lyca-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லைகாவுக்கு கெடு விதித்த ஷங்கர்.. இந்தியன் 2 படத்தை தலை முழுக போகிறாரா?

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க ஆசைப்பட்டு அதலபாதாளத்தில் விழுந்த தயாரிப்பு நிறுவனங்கள் பல உள்ளன.

அதில் சமீபகாலமாக தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து அதே சமயத்தில் தயாரித்தால் பெரிய பட்ஜெட் படத்தை தான் தயாரிப்பேன் என அடம்பிடித்து பலத்த நஷ்டத்தை சந்தித்து கொண்டிருக்கும் நிறுவனம் லைக்கா.

கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் நிறுவனம் லைக்கா.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் அடுத்ததாக வெளிவர இருந்த மிகப்பெரிய திரைப்படம் இந்தியன் 2.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இந்த படம் ஆரம்பத்திலிருந்து பல்வேறுவிதமான பிரச்சனைகளை சந்தித்து வந்தது.

இடையில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் இந்தியன் 2 படம் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இல்லாத அளவுக்கு பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கிறதாம்.

இதற்கிடையில் சங்கர் குறிப்பிட்ட தேதி வரை தான் காத்துக் கொண்டிருக்க முடியும் என அதிகாரப்பூர்வமாக நிறுவனத்திடம் அறிவித்துவிட்டாராம்.

அந்த தேதியும் முடிந்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்போது வேறு ஒரு நிறுவனத்திடம் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான வேலையில் இறங்கி விட்டாராம் சங்கர்.

காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கூட்டிட்டு போனது போல சங்கரை கூட்டிச்சென்றது பிரபல தயாரிப்பு நிறுவனம். இதனால் இந்தியன் 2 படம் இனி உருவாக வாய்ப்பில்லை என்கிறார்கள்.

kamal-indian2

kamal-indian2

Continue Reading
To Top